அறிஞர் அண்ணாவும் , ஜி.டி. நாயுடுவும்

Posted by biskothupayal


தொழில் மேதை ஜி.டி. நாயுடுவும், அண்ணாவும் கோவையில் ஒரு சமயம் பேசிக் கொண்ழருந்தனர். பல துறைகளைப் பற்றிப் பேசியதும், அரசியல் பக்கம் திரும்பியது அவர்கள் பேச்சு.
பெரியாரிடமிருந்து நீங்கள் பிரிந்து தனிக் கழகம் தொடங்கி செல்வாக்குப் பெற்று விட்டிர்கள் உங்கள் கழகத்தின் வளர்ச்சியைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனாலும் நான் பெரியாரின் கட்சிதான்!” என்றார் நாயடு.
“அதற்கு என்ன! நீங்கள் ஐயாவுடனே இருங்கள். நீங்கள் அங்கேதான் இருக்க வேண்டியவர்!” என்று கூறிவிட்டு, “வளர்ந்து வரும் தி.மு.கழகத்திற்கு எதிராக நீங்கள் ஏதாவது பிரசாரம் செய்தால் நான் என்ன செய்வேன் தெரியுமா” என்று வேடிக்கையாக்க் கேட்டார் அண்ணா.
“என்ன செய்வீர்கள்?” என்று நாயுடு அதே வேடிக்கையோடு திருப்பிக் கேட்டார்.
“பல கிராமங்களுக்குச் சென்று உங்கள் போக்கைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசுவேன். பேச்சின் மத்தியில் இன்று பதவியிலுள்ள காங்கிரஸ் அரசு மக்களுக்கு தேவையானவற்றைச் செய்து கொடுக்கவில்லை. உங்கள் வாழ்கை உணவுப் பிரச்னைக்கு நடுவே உழன்று தொல்லைப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆளுவோர் ஒருபுறம் இருக்கட்டும் இந்த ஜி.டி. நாயுடு இருக்கிறாரே அவரை பெரியமேதை என்று புகழ்ந்து கொண்டிருக்கிறோமே
அவராவது உங்களுக்கு உதவக் கூடாதா? என்று மக்களிடம் எழுச்சியை உண்டாக்குவேன்” என்று அண்ணா சிரித்துக் கொண்டே சொன்னார் சற்று பரபரப்போடு ”அதற்குப் பிறகு, என்னைப் பற்றி என்ன சொல்வீர்கள்?“ என்று கேட்டார் நாயுடு. “ஜி.டி.நாயுடு மனம் வைத்தால் நீங்கள் எல்லாம் நிம்மதியாக வாழ முடியும். அவர் உங்களுக்கு பணத்தை அள்ளிக் கொடுக்க வேண்டாம். அதைவிடப் பெரும் பயனைத் தரக்கூடிய சத்துள்ள விதைகள் வைத்துள்ளார்.
அவை எல்லாம் பயன் உள்ள துவரை, சோளம், கம்பு விதைகள் பல மடங்கு விளைச்சல் தரக்கூடியவை. அந்த விதைகளை உங்களுக்குக் கொடுத்தால் போதுமே. நீங்கள் விதைத்துப் பெரிய அளவில் தானியப் பற்றாக்குறையைப் போக்கிவிட முடியுமே? நீங்கள் இப்டிபாழுதே கோவைக்குப் படையெடுத்துப் புறப்பட்டுச் சென்று, அவர் வைத்திருக்கும் விதவிதமான விதைகளைக் கேளுங்கள் என்று நான் சொன்னால் போதும் உங்கள் பாடுபெரும் திண்டாட்டம் ஆகி விடும். மக்கள் வெள்ளம் போல் “கோபால் பார்க்கில் புகுந்து விடும்” என்றார் அண்ணா.
அதை கேட்டு பெருமையும் புரிப்பும் அடைந்து, “நீங்கள் மக்கள் உணர்ச்சியைத் தாண்டி விடுவதில் ஒர் அதிசியமான அரசியல்வாதிதான் என்றார் தொழில் மேதை.


இது போன்ற பல அரிய தகவல்கள் காண கிடைக்காத புகைபடங்களுடன்


தினமணி வெளியீடு
“அண்ணாவின் நூற்றாண்டு மலர்”
விலை : 25/-
படித்து பயன் பெறுங்கள்

இந்த பதிவு பிடித்திருந்தால் ஓட்டு போட மறவாதீர்
/javascript'/>

Views

3 comments:

  1. கலையரசன் said...

    பாஸ்.. படிச்சுட்டு திருப்பி(?) தரேன்.. குடுப்பிங்களா?

  2. கலையரசன் said...

    பாஸ்.. படிச்சுட்டு திருப்பி(?) தரேன்.. குடுப்பிங்களா?

  3. Dr.எம்.கே.முருகானந்தன் said...

    தகவல் சுவையாக இருந்தது.

Post a Comment